தீபாவளி பண்டிகையையொட்டி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுவதாக சுற்றுச்சூழல்துறை அறிவித்துள்ளது.
காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம். நீதிமன்ற உத்தரவுபடி தீபாவளி பண்டிகைக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?