இந்தியா அபார வெற்றி
உலகக்கோப்பை 2023
இந்தியா அபார வெற்றி
புள்ளிப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம்
உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 8 வது போட்டியிலும் வென்று இந்திய அணி சாதனை.
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா இதுவரை தான் ஆடிய அனைத்து ஆட்டத்திலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.
முன்னதாக, முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்திருந்த நிலையில்,327 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய தென்ஆப்பிரிக்க அணி,27.1 ஓவர்களில் 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட் ஆனது.
What's Your Reaction?