அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,72,003 கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

Nov 1, 2023 - 23:36
அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,72,003 கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,72,003 கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

 அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 1,72,003 கோடி ரூபாய் ஆக உள்ளது.

இதில்,

சிஜிஎஸ்டி மூலம் ரூ.30,062 கோடியும்

எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.38,171 கோடியும்

ஐஜிஎஸ்டி மூலம் ரூ.91,315 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.42,127 கோடியும் சேர்த்து)

செஸ் வரி மூலம் ரூ.12,456 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.1,294 கோடியும் சேர்த்து) அடங்கும்.

2023 அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ஆனது, கடந்த 2022 அக்டோபர் மாதம் வசூல் ஆன தொகையை விட 13 சதவீதம் அதிகம் ஆகும்.

5வதுமுறை

2023- 24 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை தாண்டுவது இது 5வது முறையாகும். நடப்பு நிதியாண்டில் சராசரி ஜிஎஸ்டி வசூல் ரூ.1.66 லட்சம் கோடியாக உள்ளது. 

இது கடந்த நிதியாண்டின் சராசரியை விட 11 சதவீதம் அதிகமாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow