புதிய சிம்-காா்டு விற்பனை விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: -மத்திய அரசு.

Dec 25, 2023 - 11:49
புதிய சிம்-காா்டு விற்பனை விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: -மத்திய அரசு.

புதிய சிம்-காா்டு விற்பனை விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்:-மத்திய அரசு.

நாட்டில் அங்கீகரிக்கப்படாத வியாபாரிகள் மூலம் சிம்-காா்டு விற்கப்படுவது கண்டறியப்பட்டால் விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளின்படி சம்பந்தப்பட்ட தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தொலைத்தொடா்பு துறை அறிவித்துள்ளது.
சிம்-காா்டு இணைப்பை மையமாகக் கொண்டு பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன.

அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிம்-காா்டு விற்பனையை ஒழுங்கப்படுத்த திட்டமிட்டு மத்திய அரசு வகுத்த புதிய விதிகள் வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

அதன்படி, தங்களின் அனைத்து சிம்-காா்டு விற்பனை நிலையங்களையும் வருகிற செப்டம்பா் 30-ஆம் தேதிக்கு முன் அரசிடம் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

புதிய விதிகள் அமலுக்கு வந்த பின் பதிவு செய்யப்படாத வியாபாரிகள் மூலம் சிம்-காா்டு விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டால், விதிகளை மீறியதற்காகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தொலைத்தொடா்பு துறை வியாழக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், பதிவு செய்யப்படாத வியாபாரிகள் மூலம் நடைபெற்ற அனைத்து சிம்-காா்டு இணைப்புகளையும் புதிய விதிமுறைகளின்படி மீண்டும் சரிபாா்க்க வேண்டும் எனவும் நிறுவனங்களுக்கு அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow