வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் கட்டுப்பாடு - காவல்துறை விளக்கம்

May 1, 2024 - 23:57
வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் கட்டுப்பாடு  - காவல்துறை விளக்கம்

வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் கட்டுப்பாடு

 - காவல்துறை விளக்கம்

 வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டுவதில் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டினால் மோட்டார் வாகன சட்டத்தின் 198 வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை போக்குவரத்து போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இதற்கு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து போலீஸ் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம்:

 வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.

ஊடகத்தில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் ஊடகம் என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளலாம்.

 வேறொருவர் பெயரில் உள்ள வாகனத்தில் ஊடகம் என்று ஸ்டிக்கர் ஒட்டி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.

முதல் தடவை விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.500, 2வது தடவை என்றால் ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்படும். 

நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் விதித்த கட்டுப்பாடுகள் 2.5.24 முதல் நடைமுறைக்கு வருகிறது. 

இவ்வாறு விளக்கமளித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow