இன்றைய ராசி பலன்

Nov 6, 2023 - 06:34
Nov 6, 2023 - 06:35
இன்றைய ராசி பலன்

ஐப்பசி: 20

திங்கள்- கிழமை

 06- 11- 2023

 ராசி- பலன்கள்

மேஷம் -ராசி:

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். போட்டிகளில் இருந்துவந்த தயக்கம் குறையும். பணிகளில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள். 

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 9

????அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.

⭐️அஸ்வினி : தயக்கம் குறையும். 

⭐️பரணி : அனுகூலம் உண்டாகும்.

⭐️கார்த்திகை : சோர்வான நாள்.

ரிஷபம் ராசி: 

கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வருமானத்தில் திருப்தியான சூழல் அமையும். நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். வியாபாரப் பணிகளில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். புகழ் நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : தெற்கு

????அதிர்ஷ்ட எண் : 4

????அதிர்ஷ்ட நிறம் : பாச நிறம்.

⭐️கார்த்திகை : திருப்தியான நாள்.

⭐️ரோகிணி : ஆசைகள் பிறக்கும். 

⭐️மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.

மிதுனம் -ராசி:

மனதளவில் தெளிவு பிறக்கும். உடலில் இருந்துவந்த அசதிகள் குறையும். சுரங்கப் பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். நண்பர்களுடைய சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுகம் நிறைந்த நாள்.   

????அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 3

????அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

⭐️மிருகசீரிஷம் : அசதிகள் குறையும்.

⭐️திருவாதிரை : நெருக்கம் அதிகரிக்கும்.

⭐️புனர்பூசம் : அனுபவம் வெளிப்படும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

கடகம் -ராசி:

கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். சூழ்நிலை அறிந்து முடிவுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்களிடமிருந்து விலகி செயலாற்றுவதில் ஈடுபாடு ஏற்படும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நலம் நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 

????அதிர்ஷ்ட எண் : 4

????அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.

⭐️பூசம் : தாமதங்களை அறிவீர்கள்.

⭐️ஆயில்யம் : பேச்சுக்களை தவிர்க்கவும்.

சிம்மம் -ராசி: 

புதுமையான சில செயல்களில் ஆர்வம் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். பெருந்தன்மையான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். கல்விப் பணிகளில் கவனம் வேண்டும். விவசாயப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். தாய் வழியில் அனுசரித்துச் செல்லவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். 

????அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 

????அதிர்ஷ்ட எண் : 7

????அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

⭐️மகம் : ஆர்வம் ஏற்படும்.

⭐️பூரம் : அறிமுகம் கிடைக்கும்.

⭐️உத்திரம் : அனுசரித்துச் செல்லவும். 

கன்னி -ராசி:

தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். குணநலன்களில் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் அனுபவமும், லாபமும் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். தவறிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். சிந்தனைகள் மேம்படும் நாள்.

????அதிர்ஷ்ட திசை : மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 8

????அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

⭐️உத்திரம் : செல்வாக்கு உயரும். 

⭐️அஸ்தம் : லாபம் கிடைக்கும்.

⭐️சித்திரை : சாதகமான நாள்.

துலாம் -ராசி: 

ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். ஜாமீன் தொடர்பான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். விலகிச் சென்றவர்களை பற்றிய எண்ணங்கள் மேம்படும். பெருந்தன்மையான பேச்சுக்களால் மேன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 3

????அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை.

⭐️சித்திரை : தொடர்பு கிடைக்கும்.

⭐️சுவாதி : சிந்தித்துச் செயல்படவும். 

⭐️விசாகம் : மேன்மை ஏற்படும்.

விருச்சிகம்- ராசி: 

தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தர்ம செயல்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப மாற்றம் உண்டாகும். எதிலும் முன் யோசனையோடு செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 4

????அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️விசாகம் : ஆதரவான நாள்.

⭐️அனுஷம் : மாற்றம் உண்டாகும்.

⭐️கேட்டை : அலைச்சல்கள் ஏற்படும்.

தனுசு -ராசி:

புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில அலைச்சல்களால் அனுபவம் அதிகரிக்கும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். அரசு காரியங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் நெருக்கடியான சூழல் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள். 

????அதிர்ஷ்ட திசை : மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 6

????அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️மூலம் : மாற்றம் உண்டாகும். 

⭐️பூராடம் : அனுபவம் அதிகரிக்கும். 

⭐️உத்திராடம் : நெருக்கடியான நாள்.

மகரம் -ராசி:

எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். போட்டி விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். இறை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். முதலீடுகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மூத்த சகோதரிகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயண முயற்சிகள் கைகூடிவரும். நன்மை நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 7

????அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை.

⭐️உத்திராடம் : ஆதாயம் மேம்படும். 

⭐️திருவோணம் : லாபம் அதிகரிக்கும்.

⭐️அவிட்டம் : முயற்சிகள் கைகூடும்.

கும்பம் -ராசி.

கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு தொடர்பான செயல்களில் ஆதாயம் அடைவீர்கள். தனம் நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

????அதிர்ஷ்ட எண் : 5

????அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்.

⭐️அவிட்டம்: முன்னேற்றமான நாள்.

⭐️சதயம் : பொறுமை வேண்டும்.

⭐️பூரட்டாதி : ஆதாயம் ஏற்படும்.

மீனம் -ராசி:

கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் திறமைகள் வெளிப்படும். அலுவலகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கடினமான விஷயங்களையும் எளிதாகப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். எதையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. மகிழ்ச்சி நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : வடக்கு 

????அதிர்ஷ்ட எண் : 8

????அதிர்ஷ்ட நிறம் : லேசான நீலம்.

⭐️பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும். 

⭐️உத்திரட்டாதி : புரிதல் ஏற்படும்.

⭐️ரேவதி : சிந்தித்துச் செயல்படவும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow