தமிழகத்தில் வீசப்போகுது வெப்ப அலை...

Apr 27, 2024 - 13:49
தமிழகத்தில் வீசப்போகுது வெப்ப அலை...

தமிழகத்தில் வீசப்போகுது வெப்ப அலை...

மக்களே உஷார்...

அடுத்த 5 தினங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.

தமிழகத்தில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 5 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும்

கடந்த 24 மணி நேரத்தில் 9 இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது என்றும்

ஈரோட்டில் அதிகபட்சமாக 42.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 30 மற்றும் மே 1ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow