இன்றைய ராசி பலன்

Nov 5, 2023 - 07:03
Nov 4, 2023 - 18:31
இன்றைய ராசி பலன்

ஐப்பசி: 19 ஞாயிறு 05- 11- 2023

மதுரை வாய்ஸ் ராசி- பலன்கள் 

மேஷம்:

நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பாகப்பிரிவினை சார்ந்த முயற்சிகள் கைகூடும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் ஏற்படும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். வியாபாரப் பணிகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

அஸ்வினி : சந்திப்பு ஏற்படும். 
பரணி : ஆர்வம் உண்டாகும். 
கிருத்திகை :  அனுகூலமான நாள்.

ரிஷபம்:

திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த முயற்சிகள் கைகூடிவரும். ஒப்பந்தப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சமையல் துறையில் திறமைகள் வெளிப்படும். சிந்தனைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை.

கிருத்திகை : அனுபவம் கிடைக்கும். 
ரோகிணி : தாமதங்கள் விலகும்.
மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.

மிதுனம்:

கால்நடை வளர்ப்பு பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். எந்த ஒரு காரியத்திலும் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய மக்களின் தொடர்பு கிடைக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

மிருகசீரிஷம் : ஆதாயம் அடைவீர்கள். 
திருவாதிரை : பிரச்சனைகள் குறையும். 
புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.

கடகம்:

 
எதிலும் தனித்துவமாகச் செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்கள் கைகூடிவரும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பறிந்து நடப்பது நல்லது. மற்றவர்களிடத்தில் கருணையுடன் செயல்படவும். முயற்சிக்கு உண்டான மதிப்பு தாமதமாகக் கிடைக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.

புனர்பூசம் : பயணங்கள் கைகூடிவரும்.
பூசம் : பொறுப்பறிந்து செயல்படவும்.
ஆயில்யம் : குழப்பம் ஏற்படும்.

சிம்மம்:  


எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். சமூகப் பணிகளில் மாற்றமான சூழல் அமையும். சில அனுபவங்களால் மனதளவில் மாற்றம் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். ஆன்மிகப் பணிகளில் தெளிவு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

மகம் : சேமிப்பு குறையும்.
பூரம் : மாற்றம் உண்டாகும். 
உத்திரம் : தெளிவு ஏற்படும்.

கன்னி:


நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். காப்பீட்டுப் பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பு உயரும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.

உத்திரம் : காரியங்கள் நிறைவேறும். 
அஸ்தம் : முடிவுகளை எடுப்பீர்கள். 
சித்திரை : மதிப்பு உயரும்.

துலாம்:

 
பெற்றோர் வழியில் ஆதரவு ஏற்படும். உடனிருப்பவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். வியாபார இடமாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். திறமைக்கான வாய்ப்புகள் ஏற்படும். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

சித்திரை : ஆதரவு ஏற்படும். 
சுவாதி : அறிமுகம் உண்டாகும். 
விசாகம் : வாய்ப்புகள் ஏற்படும்.

விருச்சிகம்: 

மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். தடைப்பட்ட சில பணிகளை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். விலகிச் சென்றவர்களைப் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் புதிய பாதைகள் புலப்படும். நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சலனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.

விசாகம் : அனுசரித்துச் செல்லவும். 
அனுஷம் : பொறுமையுடன் செயல்படவும்.
கேட்டை : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

 தனுசு:

 
சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் தன்மையையறிந்து பழகவும்.  வாக்குறுதிகள் கொடுப்பதைக் குறைத்துக் கொள்ளவும். வியாபாரப் பணிகளில் நிதானம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் அமைதியுடன் செயல்படவும். பயனற்ற விவாதங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : நிதானத்துடன் செயல்படவும்.
உத்திராடம் : வாதங்களைத் தவிர்க்கவும்.

மகரம்:

கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் நன்மை உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் படிப்படியாகக் குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

உத்திராடம் : நன்மை உண்டாகும்.
திருவோணம் : அறிமுகம் ஏற்படும். 
அவிட்டம் : குழப்பங்கள் குறையும்.

கும்பம்:

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் உயர்வான சூழல் அமையும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளைக் குறைத்துக் கொள்ளவும். பணிபுரியும் இடத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தேர்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

அவிட்டம்: மாற்றம் ஏற்படும்.
சதயம் : ஆர்வம் உண்டாகும். 
பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும். 

மீனம்: 


தன வருவாய் குறித்த சிந்தனைகள் மேம்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை விலகும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் நாட்டம் உண்டாகும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் ஏற்படும். பரிசு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும். 
உத்திரட்டாதி : நாட்டம் உண்டாகும்.
ரேவதி : அலைச்சல்கள் ஏற்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow