உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்!
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்!
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கலை கல்லூரி மற்றும் கலையியல் கல்லூரிகளில் உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தது.
அதன்படி கடந்த மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை
www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் தற்போது விண்ணப்பிதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளதாவது;
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த மார்ச் 14 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 29.04.2024 லிருந்து 15.05.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளது.
What's Your Reaction?