ஆசிரியர், அமைச்சர் பேச்சுவார்த்தை தோல்வி - மீண்டும் போராட்டம்!
ஆசிரியர், அமைச்சர் பேச்சுவார்த்தை தோல்வி - மீண்டும் போராட்டம்!
ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
அரசு பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே பணி நியமனம் வழங்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நாளை தொடங்க உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்ப பதிவை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
ஆசிரியர் மறு நியமன தேர்வை ரத்து செய்வதாக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறிய ஆசிரியர்கள், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.
What's Your Reaction?