மாநில எல்லையில் மட்டும் இனி வாகன சோதனை -தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு.
மாநில எல்லையில் மட்டும் இனி வாகன சோதனை -தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு.
19-04-2024 அன்று மாநிலம் முழுதும் இரவு 7:00 வரை, 72.09 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இதில், தபால் ஓட் டுகள் சேர்க்கப்படவில்லை. ஓட்டுச்சாவடியில் பதிவான ஓட்டுகள் விபரம் தெரி விக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் இரவு 7:00 மணிக்கு, 69 சதவீத ஓட் டுகள் பதிவாகின.
19-04-2024 அன்று வெயில் அதிகம் இருந்ததால், மாலை 3:00 மணிக்கு மேல் ஏராள மானோர் ஓட்டளித்தனர். மாலை 6:00 மணிக்கு உள்ளாக ஓட்டளிக்க வந் தவர்களுக்கு, டோக்கன் கொடுத்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.
ஓட்டுப்பதிவு முடிந்து விட்டதால், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு நிறைய இடத்தில் மாற்றப் படும்.
தேர்தல் கமிஷன் அறிவுரையின்படி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநி லங்களில் தேர்தல் நடக்கும் வரை, எல்லை பகுதியில்
தேவைக்கேற்ப பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு செயல்படும்; மற்ற பகு திகளில் செயல்படாது. எல்லை பகுதியில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும்.
ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள், கட்சியினர் அறிக்கை அடிப் படையில், மறுஓட்டுப்பதிவு தேவையென்றால் நடத் தப்படும். தேர்தல் மிகவும் சுமுகமாக, சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாமல் நடந்து முடிந்துள்ளது என கூறினார்
What's Your Reaction?