தமிழகத்தில் முதுநிலை மருத்துவம் படித்தபின் கட்டாய பணி ஓராண்டாக குறைப்பு.

Nov 2, 2023 - 09:56

தமிழகத்தில் முதுநிலை மருத்துவம் படித்தபின் கட்டாய பணி ஓராண்டாக குறைப்பு.

தமிழகத்தில் எம்டி, எம்எஸ்போன்ற முதுநிலை இடங்களைபெற்றவர்கள், தங்களது படிப்பைநிறைவு செய்த பின், 2 ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயம்.

முதுநிலை மருத்துவம் படித்த மாணவர்களுக்கான ஒப்பந்த காலத்தை, 2 ஆண்டுகளுக்கு பதிலாக, ஓராண்டாக குறைத்து சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அரசாணை வெளியிட்டுள்ளார்.

ஒப்பந்ததை மீறும்போது செலுத்த வேண்டிய அபராததொகை ரூ.40 லட்சத்தில் இருந்துரூ.20 லட்சமாக குறைக்கப்படுகிறது.

முதுநிலை மருத்துவத்துக்கு பின்னர், முதுநிலை பட்டய படிப்பு நிறைவு செய்தவர்களுக்கு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow