நாகர்கோவில் - சென்னை இடையே தீபாவளி சிறப்பு ரயில்.. முன்பதிவு தொடங்கியது.
நாகர்கோவில் - சென்னை இடையே தீபாவளி சிறப்பு ரயில்.. முன்பதிவு தொடங்கியது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் நாகர்கோவிலுக்கு 4 நாள்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகை காலத்தில் ஏற்படும் கூட்டு நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக நாகர்கோவில் - தாம்பரம் இடையே நெல்லை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
நாகர்கோவிலில் இருந்து மாலை 4:35 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு பண்டிகை சிறப்பு ரயில் நவம்பர் 5,12,19,26 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.
இந்த ரயில் அடுத்த நாள் அதிகாலை 4:10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மறு மார்க்கமாக நவம்பர் 6,13,20,27 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து காலை 8:05 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8:45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
ரயிலில் ஒரு இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி, 5 மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி, 11 படுக்கை வசதிப்பெட்டி, இரண்டு பொதுபெட்டி மற்றும் இரண்டு மாற்றுத்திறனாளி இரண்டாம் வகுப்பு பெட்டி இருக்கும். இந்த ரயிலுக்கு முன்பதிவு நவம்பர் இரண்டாம் தேதி காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
What's Your Reaction?