எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
இன்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு பலத்த மற்றும் கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது.
இந்த நிலையில், நேற்றுமுதல் பெய்து வரும் கனமழை காரணமாக மதுரை, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளும் இன்று நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?