சதுரகிரி மலைப்பகுதியில் கன மழை எச்சரிக்கை -பக்தர்களுக்கு அனுமதி இல்லை
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கார்த்திகை மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.
இக்கோயிலில் டிச.24ல் பிரதோஷம், டிச. 26 பவுர்ணமி வழிபாடு பூஜைகளும் நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் டிச. 24 முதல் டிசம்பர் 27 வரை 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனத்துறை அறிவித்துள்ளது...
What's Your Reaction?