நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் வைட்டமின்கள் என்ன...
நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் வைட்டமின்கள் என்ன...
எந்த உணவில் இருக்கு...
வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் உடலுக்கு ஊட்டமளிக்கும் . மேலும் உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். வலுவான நோயெதிர்ப்பு மண்டலம் என்பது உடலுக்கு அவசியமானது. இது சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு எதிராக உடலை பலப்படுத்தும். மேலும் உடல் காயம் ஏற்பட்டாலும் காயத்திலிருந்து வேகமாக மீட்டு ஆற்றல் மட்டத்தை உயர்வாக வைத்திருக்க செய்யும். உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சிறந்த வைட்டமின்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
வைட்டமின் சி...
உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் வைட்டமின் சி
உடல் வைட்டமின் சி தானே உற்பத்தி செய்யாததால் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின் சி எடுத்துகொள்வது அவசியம். அதே நேரம் இது உடலில் சேமித்தும் வைக்காது என்பதால் தினசரி உணவுகளில் இதை எடுத்துகொள்ள வேண்டும்.
இது ஆரஞ்சு பழங்களில் மிகுதியாக உள்ளது. பலவிதமான பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து உங்கள் வைட்டமின் சி எடுக்கலாம். சிவப்பு குடைமிளகாய், மிளகு, ஆரஞ்சு மற்றும் ஆரஞ்சு சாறு, திராட்சைப்பழம், கிவி, பச்சை மிளகாய், ப்ரக்கோலி, ஸ்ட்ராபெர்ரி, முளைகட்டிய தானியங்கள் போன்றவை.
உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் வைட்டமின் பி6...
நோயெதிர்ப்பு மண்டலத்தில் உயிர்வேதியியல் எதிர்வினைகளை ஆதரிக்க இவை அவசியமானவை. வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் டி செல்களை உற்பத்தி செய்வதில் அதன் பங்கு முக்கியமானது. வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்றவற்றை எதிர்த்து போராடுவதற்கு உடலில் உள்ள இந்த டி செல்கள் அவசியம்.
வைட்டமின் பி 6 நிறைந்த உணவுகள் கொண்டைக்கடலை, மாட்டிறைச்சி, விலங்குகளின் கல்லீரல், சால்மன் மற்றும் டுனா போன்ற குளிர்ந்த நீர் , கோழியின் மார்பு இறைச்சி, வலுவூட்டப்பட்ட உணவு தானியங்கள், உருளைக்கிழங்கு , வான்கோழி, வாழைப்பழங்கள் போன்றவை வைட்டமின் பி6 நிறைந்த உணவுகள் ஆகும்.
உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் வைட்டமின் ஈ...
வைட்டமின் ஈ சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது உடலில் தொற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது. உடல் நோயெதிரிப்பு செயல்பாட்டுக்கு வைட்டமின் ஈ மிகவும் அவசியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இது உடலில் டி செல்களை உச்ச செயல்திறனில் வேலை செய்ய உதவுகிறது.
வைட்டமின் ஈ மருந்தாக எடுப்பது சமயங்களில் பக்கவிளைவுகளை உண்டு செய்யலாம். அதற்கு மாற்றாக அதை உணவில் எடுக்கலம். வீட் ஜெம் எண்ணெய், சூரியகாந்தி விதைகள், பாதாம், வேர்க்கடலை, பீனர் வெண்ணெய், கொட்டைகள், கீரைகள், ப்ரக்கோலி, கிவி, மாம்பழம், தக்காளி, கீரை.
* உடலுக்கு எதிர்ப்பு சக்தி* அளிக்கும் ஜிங்க் அதாவது
துத்தநாகம் (ஜிங்க்) அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றமாகும்...
இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் நுழை வாயில் என்று சொல்கிறார்கள். இதுநோயெதிர்ப்பு செல்கள் அனைத்தும் சரியாக செயல்படுவதற்கு பொறுப்பு வகிக்கிறது.
ஜிங்க் சிப்பிகளில் மிக நிறைவாக உள்ளது. ஜிங்க் அளவை உட்கொள்ளலை அதிகரிப்பதற்கான பிற உணவுகள் சிப்பிகள், மாட்டிறைச்சி, நீல நண்டு, பூசணி விதைகள் வேகவைத்த பன்றி இறைச்சி, வான் கோழி, மார்பக இறைச்சி, பாலாடைக்கட்டி, இறால் மீன், பருப்பு, யோகர்ட் மற்றும் பால் ஆகும்.
உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் செலினியம்...
செலினியம் என்பது ஆரோக்கியமாக வைத்திருக்கும் முக்கிய சத்து. இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மட்டும் பலப்படுத்தாமல் இதயம் பம்ப் செய்வதை ,மேம்படுத்தும். மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மிகைப்படுத்தாமல் தடுக்கிறது. நாள்பட்ட அழற்சி, தன்னுடல் தாக்க நோய்களான முடக்கு வாதம், கிரோன் நோய் மற்றும் தடிப்பு தோல் அழற்சி போன்றவற்றிலிருந்து உங்களை பாதுகாக்கும்.
செலினியம் அதிகம் உள்ள பிரேசில் கொட்டைகள், சூரை மீன், மத்தி, மெலிந்த இறைச்சிகள், பாலாடைக்கட்டி, பழுப்பு அரிசி, முட்டைகள், ஓட்ஸ், பால் மற்றும் தயிர், பருப்பு, கொட்டைகள் மற்றும் விதைகள் சேர்க்கலாம்.
கலர் கலரான உணவுகள்
வண்ணமயமான உணவுகள் வைட்டமின்கள் அடங்கியவை. பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கும் போது பழங்களின் நிறங்களை பொறுத்து அவை சிறந்ததாக அமையும்.
பல்வேறு வகையான உணவுகளை சாப்பிடுங்கள். மேலும் ஒவ்வொரு நிறத்திலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். உங்கள் உணவு தட்டு கலர் கலரான உணவுகளுடன் சுவையாக இருக்கட்டும். நீங்கள் முடிந்தவரை ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை பெறுவதை உறுதி செய்யுங்கள்.
நீர்...
உடலுக்கு நீர் அதிகம்
உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிக மிக அவசியம். வைட்டமின் நிரம்பிய உணவுகளுக்கு கூடுதலாக உங்கள் உடல் நீரேற்றம் என்பது ஆரோக்கியமானது.
நீர் உங்கள் உடல் நிணநீர் உற்பத்திக்கு உதவுகிறது. இது வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் பிற நோயெதிர்ப்பு மண்டல செல்களை கொண்டு செல்ல உதவுகிறது.
அதே நேரம் நீரேற்றத்துக்கு காஃபி மற்றும் சோடா போன்ற நீரிழப்பை ஏற்படுத்தும் பானங்களை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். வெள்ளரிகள், செலரி மற்றும் தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துகொள்ளலாம்.
இந்த சத்துகளை மருந்தாக எடுத்துகொண்டால் சமயங்களில் பக்கவிளைவுகளை உண்டு செய்யலாம். ஆனால் இதை உணவாக எடுக்கும் போது பக்கவிளைவுகள் உண்டாகாது.
What's Your Reaction?