மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும்போது உயர் அழுத்த மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கத் தடை!

Apr 3, 2024 - 12:12
மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும்போது உயர் அழுத்த மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கத் தடை!

மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும்போது உயர் அழுத்த மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கத் தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு.

மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும்போது உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சியடிக்க ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. முன்பதிவு செய்து பாரம்பரிய முறையில் தோல் பை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும். கள்ளழகர் அழகர் மலையில் இருந்து வைகை ஆறு வரும்வரை எந்த இடத்திலும் நீரை பீய்ச்சி அடிக்கக் கூடாது. மதுரை காவல் கண்காணிப்பாளர், ஆணையர் ஆகியோர் இதனை உறுதிப்படுத்த வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow