தீபாவளி மறுநாளான நவம்பர் 13-ஆம் தேதி(திங்கள்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Nov 6, 2023 - 18:39
தீபாவளி மறுநாளான நவம்பர் 13-ஆம் தேதி(திங்கள்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி மறுநாளான நவம்பர் 13-ஆம் தேதி(திங்கள்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தீபாவளிப் பண்டிகையையொட்டி சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரப் பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். 

இந்நிலையில் நடப்பாண்டு தீபாவளி பண்டிகையானது வருகின்ற நவம்பர் 12-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை என்பதால் திங்கள்கிழமை வழக்கம்போல் பள்ளி, அலுவலகங்கள் செயல்படும் சூழல் உள்ளது. 

இதன் காரணமாக பண்டிகை நாளன்று இரவே சொந்த ஊர்களில் இருந்து புறப்பட வேண்டியுள்ளதால் நவம்பர் 13 ஆம் தேதி(திங்கள்கிழமை) ஒருநாள் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியது. 

பள்ளிகளுக்கு விடுமுறை

மேலும், பல்வேறு தரப்பினரும் இந்த கோரிக்கையை முன்வைத்த நிலையில் தமிழக அரசு இன்று பிற்பகல் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்ட நிலையில் நவம்பர் 13-ஆம் தேதி(திங்கள்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow