வெளியானது பொறியியல் தரவரிசைப் பட்டியல்

Jul 1, 2026 - 16:16
 0  89
வெளியானது பொறியியல் தரவரிசைப் பட்டியல்

தமிழகத்தில் 2026–27 கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான (TNEA) தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார்.

நடப்பாண்டில் பொறியியல் படிப்பில் சேர 2,45,235 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் தங்களது தரவரிசையை tneaonline.org இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றவர்கள் 53 பேர். இவர்களில் 39 பேர் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 5 இடங்கள்:
• 1-வது இடம் – தர்மபுரி: அக்ஷிதா
• 2-வது இடம் – திருப்பூர்: ரோகித் பாலன்
• 3-வது இடம் – நாமக்கல்: வெங்கட கிருஷ்ணன்
• 4-வது இடம் – அரியலூர்: ரிக்ஷிதா
• 5-வது இடம் – கன்னியாகுமரி: ரத்தன்

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0