எம்.ஆர். விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்

Jun 29, 2026 - 11:33
 0  77
எம்.ஆர். விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்

எம்.ஆர். விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்

சென்னை: கரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை தமிழக சட்டப்பேரவை சபாநாயகரிடம் நேரில் வழங்கியுள்ளார். சபாநாயகர் அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, கரூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பின்னர் அந்தத் தகவல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

எம்.ஆர். விஜயபாஸ்கரின் இந்த திடீர் முடிவு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 0
Wow Wow 0