உலகச் செய்திகள் | பிரான்சில் கொடிய வெப்ப அலை
உலகச் செய்திகள் | பிரான்சில் கொடிய வெப்ப அலை
பிரான்ஸ்: நாட்டை தாக்கியுள்ள கடும் வெப்ப அலை காரணமாக, கடந்த 3 நாட்களில் மட்டும் 2,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் 44.3°C வரை வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களில் 85% பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்லாயிரக்கணக்கானோர் வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகளால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, பிரான்சின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற பயணங்களைத் தவிர்க்கவும், போதிய அளவு தண்ணீர் அருந்தவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெப்ப அலை தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
#France #HeatWave #WorldNews #Climate #MaduraiVoice
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0