மனமகிழ் மன்றங்களில் தனிநபர்கள் ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் தடை

Jul 2, 2026 - 17:30
 0  11
மனமகிழ் மன்றங்களில் தனிநபர்கள் ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் தடை

மனமகிழ் மன்றங்களில் (பார்கள்) அரசு அதிகாரிகளைத் தவிர வேறு எந்த தனிநபர்களும் ஆய்வு மேற்கொள்ளவோ, வீடியோ பதிவு செய்யவோ அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆய்வு என்ற பெயரில் சிலர் மனமகிழ் மன்றங்களுக்குள் நுழைந்து, ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் எடுத்து பிரச்னைகளை ஏற்படுத்துவதாக தமிழ்நாடு மனமகிழ் மன்ற உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகாரப்பூர்வ அனுமதி பெற்ற அரசு அதிகாரிகள் மட்டுமே ஆய்வு மேற்கொள்ள முடியும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0