தவெக எம்எல்ஏ-வுக்கு ரூ.35 கோடி பேரம்? – 3 பேர் கைது; செந்தில் பாலாஜி சகோதரர் வீடு சோதனை
தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஐபிடிஎஸ் (IPDS) அமைப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அறிவுரையின்படி இளையராஜாவை தொடர்புகொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆதரவு அளிக்குமாறு தன்னிடம் பேசியதுடன், அதற்கான சன்மானமாக ரூ.35 கோடி வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறியதாக எம்எல்ஏ இளையராஜா புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தை வெளியில் தெரிவித்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என திருநாவுக்கரசு மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
1
Sad
0
Wow
0