தவெக இணைப்பு விழாவில் பரபரப்பு கருத்துகள்

Jul 2, 2026 - 15:27
 0  1
தவெக இணைப்பு விழாவில் பரபரப்பு கருத்துகள்

தவெகவில் நடைபெற்ற இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ரமேஷ், "எம்.ஜி.ஆருக்குப் பிறகு மக்கள் ஏற்றுக்கொண்ட தலைவர் விஜய்தான். அவரது தலைமையை ஏற்று பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ச்சியாக தவெகவில் இணைந்து வருகின்றனர்" என்றார்.

மேலும், "எங்களை 'சோபா மாடல்' என விமர்சிக்கிறார்கள். ஆனால் அவர்கள் 'பாப்பா மாடல்'; எதற்கெடுத்தாலும் அழுகிறார்கள்" என்று எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

அதே நிகழ்வில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், "உண்மையைப் பேசினால் துரோகி என்கிறார்கள். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்று கூறுவது சரியா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "கரூர் சம்பவத்துக்கான கணக்கை தீர்க்காமல் விடமாட்டோம். காவல்துறையை பயன்படுத்தி எங்கள் மக்களை தாக்கினர். அதற்கான பழைய கணக்கு இன்னும் உள்ளது; அதற்கு நிச்சயம் பதில் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0