அதிர வைக்கும் தவெகவின் அரசியல் அகராதி!
“விஜய்யின் அரசியல் அகராதியில் சில வார்த்தைகளுக்கான அர்த்தமே வேற மாதிரி இருக்கிறதே!”
“என்ன சொல்ற?”
“சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், ‘மக்கள் பணத்தை நாங்கள் தொட மாட்டோம்; தொட விடமாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம்’ என்று சொன்னாரே?”
“ஆமாம்… தவறு செய்தவர்களை விடமாட்டோம் என்ற அர்த்தத்தில்தானே சொன்னார்?”
“ஆனால் இப்போது நடப்பதைப் பார்த்தால், ‘தொட்டவர்களை வேறு எங்கும் விடமாட்டோம்; நம்மோடு சேர்த்துக் கொள்வோம்’ என்பதுபோல இருக்கிறதே!”
“நீயாகப் புதுப் புதுசாக அர்த்தம் சொல்லாதே. தவறு செய்தவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டோம் என்பதுதான் அதன் பொருள்.”
“நான் என்ன சொல்வது? நேற்று நடந்த அரசியல் நிகழ்வுகளே அதற்கான செயல்முறை விளக்கமாக இருக்கின்றன!”
“அதை மட்டும் வைத்து முடிவுக்கு வந்துவிட முடியுமா? தவெக ஒரு ‘தூய சக்தி’ என்று சொல்லப்பட்டிருக்கிறதே?”
“ஒரு நதியில் இயல்பாகத் தண்ணீர் ஓடும்போது அது தூய்மையாக இருக்கும். ஆனால் அதில் பல மாசடைந்த ஆறுகள் வந்து கலந்தால், அந்த நீரின் தன்மையே மாறிவிடும்.”
“என்ன சொல்ல வருகிறாய்?”
“தேர்தல் நேரத்தில் புதிதாகப் பெருக்கெடுத்து ஓடும் நதியைப் போல தவெகவை மக்கள் ஆர்வத்துடன் பார்த்தார்கள். ஆனால் இப்போது பழைய அரசியல் முகங்கள் தொடர்ந்து வந்து இணைவதைப் பார்க்கும்போது, அந்த ‘தூய சக்தி’ என்ற அடையாளம் தொடருமா என்ற கேள்வி எழுகிறது.”
– சாவித்திரி கண்ணன்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0