இன்றைய ராசிலன்
*_꧁. ???? ஐப்பசி: 10. ???????? ꧂_*
*_???? வெள்ளிக்கிழமை_ ????*
*_???? 27 - 10- 2023 ????_*
*_???? மேஷம் -ராசி: ????_*
குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளிவட்டாரங்களில் அலைச்சல்கள் மேம்படும். வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களால் சில மாற்றமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் உழைப்புக்கு உண்டான லாபம் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய முதலீடுகளில் விவேகம் வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
????அதிர்ஷ்ட எண் : 9
????அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.
⭐️அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும்.
⭐️பரணி : மாற்றமான நாள்.
⭐️கிருத்திகை : விவேகம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_✡ ரிஷபம் ராசி: ????_*
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் அமையும். நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். துணிவு வேண்டிய நாள்.
????அதிர்ஷ்ட திசை : கிழக்கு
????அதிர்ஷ்ட எண் : 6
????அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை.
⭐️கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
⭐️ரோகிணி : சாதகமான நாள்.
⭐️மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_???? மிதுனம் -ராசி: ????_*
செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சமூகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பாராட்டு நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : வடக்கு
????அதிர்ஷ்ட எண் : 7
????அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.
⭐️மிருகசீரிஷம் : துரிதம் உண்டாகும்.
⭐️திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐️புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_???? கடகம் -ராசி: ????_*
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். அணுகுமுறைகளில் மாற்றம் உண்டாகும். வீடு வாகனங்களை சரி செய்வீர்கள். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்களிடத்தில் ஆதரவு கிடைக்கும். மனதளவில் புதுவிதமான உத்வேகம் பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.
????அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
????அதிர்ஷ்ட எண் : 3
????அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️புனர்பூசம் : கலகலப்பான நாள்.
⭐️பூசம் : மாற்றம் உண்டாகும்.
⭐️ஆயில்யம் : உத்வேகம் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_???? சிம்மம் -ராசி: ????_*
எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். திட்டமிட்ட சில காரியங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில்நுட்ப கருவிகளால் விரயங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.
????அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
????அதிர்ஷ்ட எண் : 9
????அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.
⭐️மகம் : சேமிப்பு குறையும்.
⭐️பூரம் : அலைச்சல்கள் மேம்படும்.
⭐️உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_???? கன்னி -ராசி: ????♀️_*
உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். புதியவர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை அறிவீர்கள். நன்மை நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : மேற்கு
????அதிர்ஷ்ட எண் : 5
????அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.
⭐️உத்திரம் : தெளிவு பிறக்கும்.
⭐️அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️சித்திரை : பலவீனங்களை அறிவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_???? துலாம் -ராசி: ⚖_*
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் மாற்றமான அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் மனம் விட்டுப் பேசவும். அரசு காரியங்களில் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அசதி நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : மேற்கு
????அதிர்ஷ்ட எண் : 1
????அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.
⭐️சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
⭐️சுவாதி : மாற்றமான நாள்.
⭐️விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_???? விருச்சிகம்- ராசி: ????_*
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் கல்வி குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். வித்தியாசமான அனுபவங்களின் மூலம் சில புரிதல்கள் உண்டாகும். பணியில் மாற்றமான சூழல் அமையும். வர்த்தக வியாபாரத்தில் சிந்தித்துச் செயல்படவும். ஆடம்பர செலவுகளைக் குறைப்பீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : தெற்கு
????அதிர்ஷ்ட எண் : 4
????அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐️விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
⭐️அனுஷம் : மாற்றமான நாள்.
⭐️கேட்டை : செலவுகளைக் குறைப்பீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_???? தனுசு -ராசி: ????_*
நினைத்த பணிகள் தடையின்றி முடியும். உறவுகளின் வழியில் ஒற்றுமை உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்களால் திருப்தியான சூழல் அமையும். பேராசை நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : தெற்கு
????அதிர்ஷ்ட எண் : 8
????அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.
⭐️மூலம் : ஒற்றுமை உண்டாகும்.
⭐️பூராடம் : அலைச்சல்கள் ஏற்படும்.
⭐️உத்திராடம் : திருப்தியான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_???? மகரம் -ராசி: ????_*
மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு, மனை விற்பனையில் லாபம் ஏற்படும். வியாபாரத்தில் சில ரகசியங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் அனுகூலமான சூழல் உண்டாகும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : வடக்கு
????அதிர்ஷ்ட எண் : 1
????அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
⭐️உத்திராடம் : மதிப்பளித்துச் செயல்படவும்.
⭐️திருவோணம் : லாபகரமான நாள்.
⭐️அவிட்டம் : தன்னம்பிக்கை மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_???? கும்பம் -ராசி. ⚱_*
கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவது நல்லது. புதிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான ஒப்பந்தங்களில் பொறுமை வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்ப்பு நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : வடக்கு
????அதிர்ஷ்ட எண் : 4
????அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️அவிட்டம் : சிந்தித்துச் செயல்படவும்.
⭐️சதயம் : அனுபவம் வெளிப்படும்.
⭐️பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_???? மீனம் -ராசி: ????_*
ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.
????அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
????அதிர்ஷ்ட எண் : 5
????அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்.
⭐️பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
⭐️உத்திரட்டாதி : சாதகமான நாள்.
⭐️ரேவதி : விவேகத்துடன் செயல்படவும்.
*┈┉┅━•• ????????????••━┅┉┈*
What's Your Reaction?