ராசி- பலன்கள்

Oct 31, 2023 - 09:36
ராசி- பலன்கள்

ஐப்பசி: 14. 
செவ்வாய்-கிழமை 
31- 10- 2023

மதுரை வாய்ஸ் ராசி- பலன்கள்

மேஷம் -ராசி:

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். சாதுரியமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். ஆசைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை. 

அஸ்வினி : புரிதல் உண்டாகும்.
பரணி : புத்துணர்ச்சி ஏற்படும்.
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.

ரிஷபம் ராசி: 


தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் பிறக்கும். எதிலும் திருப்தியில்லாத மனநிலை உண்டாகும். பொதுவாழ்வில் அனுபவம் அதிகரிக்கும். சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு  ஏற்ப அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான தயக்கம் உண்டாகும். சிரமம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம். 

கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும். 
ரோகிணி : அனுபவம் அதிகரிக்கும். 
மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.

மிதுனம் -ராசி: 


தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். ஆடம்பர விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். வேதியியல் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதளவில் மாற்றமான சிந்தனைகள் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள். 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும். 
திருவாதிரை : ஈடுபாடு உண்டாகும். 
புனர்பூசம் : புரிதல் அதிகரிக்கும்.

கடகம் -ராசி: 


எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். கடிதம் வழியாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் விலகும். கைத்தொழிலில் மேன்மை ஏற்படும். புகழ்ச்சிக்கு மதி சாய்க்காமல்  இருக்கவும். மனதளவில் புதிய ஆசைகள் பிறக்கும். தாய் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை.

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : மேன்மை ஏற்படும். 
ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

சிம்மம் -ராசி:  


வியாபாரப் பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். எண்ணிய காரியங்கள் நிறைவேறும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவுகள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம். 

மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 
பூரம் : தெளிவு பிறக்கும். 
உத்திரம் : கருத்து வேறுபாடுகள் மறையும். 

 கன்னி -ராசி: 


நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். நவீனத் தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பு பணிகளில் தெளிவு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோக முயற்சிகளில் சாதகமான சூழல் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.  
அஸ்தம் : தெளிவு ஏற்படும். 
சித்திரை : சாதகமான நாள்.

 துலாம் -ராசி: 
உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவேகம் வேண்டிய நாள். 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

சித்திரை : விட்டுக்கொடுத்துச் செல்லவும். 
சுவாதி : சிந்தித்துச் செயல்படவும்.
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.

விருச்சிகம்- ராசி: 


தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் புரிதல் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் மேம்படும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். மக்கள் தொடர்பு துறையில் செல்வாக்கு அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.

விசாகம் : ஆதரவான நாள்.
அனுஷம் : அறிமுகம் ஏற்படும். 
கேட்டை : பொறுமையை கடைபிடிக்கவும்.

தனுசு -ராசி: 


நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதைக் குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். காப்பீடு பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள்  ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

மூலம் : பிரச்சனைகள் குறையும்.   
பூராடம் : மேன்மை உண்டாகும். 
உத்திராடம் : வரவுகள் மேம்படும்.

மகரம் -ராசி: 


குழந்தைகள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கூட்டாளிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். இலக்கியப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருக்கும் பலவிதமான குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 
திருவோணம் : ஆர்வம் உண்டாகும். 
அவிட்டம் : தெளிவு ஏற்படும்.

கும்பம் -ராசி. 


பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மேன்மை உண்டாகும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

அவிட்டம் : ஆதாயம் உண்டாகும். 
சதயம் : பிரச்சனைகள் குறையும்.
பூரட்டாதி : ஒத்துழைப்பு ஏற்படும்.

மீனம் -ராசி: 


கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உயரதிகாரிகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் அமையும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம். 

பூரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும். 
உத்திரட்டாதி : எண்ணங்களை அறிவீர்கள்.
ரேவதி : மாற்றங்கள் ஏற்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow