தமிழக போக்குவரத்து துறையும், தபால் துறையும் இணைந்து, பொதுமக்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தந்துள்ளார்கள்
தமிழக போக்குவரத்து துறையும், தபால் துறையும் இணைந்து, பொதுமக்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தந்துள்ளார்கள்..
அது என்ன தெரியுமா?
தமிழக போக்குவரத்து துறை தனது டிஜிட்டல் சேவையை மென்மேலும் விரிவுபடுத்தி வருகிறது...குறிப்பாக மாநில அரசுகளால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (Regional Transport Office - RTO) பல்வேறு திட்டங்களுடன் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
வழக்கமாக, டிரைவிங் லைசென்ஸ் முதல், வாகனப் பதிவெண் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, இந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் மட்டுமே பெற முடியும்.. இவற்றில் திருத்தம், சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட சேவைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று தான் விண்ணப்பித்து பெற முடியும்...
டிரைவிங் லைசென்ஸ்: இப்படிப்பட்ட சூழலில்தான், ஆர்.டி.ஓ அலுவலக சேவைகளை டிஜிட்டல் முறையில் மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.. மொத்தம் 42 வெவ்வேறு விதமான சேவைகளை இனி ஆன்லைனில் பெறலாம் என்ற அறிவிப்பினை, கடந்த மார்ச் 23-ந்தேதி, சட்டசபையில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்திருந்தார்.
42 சேவைகள்: அதில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு மக்கள் செல்லாமல், ஆன்லைன் மூலமாகவே, தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மேலும் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக கூறியிருந்தார்.. அமைச்சரின் இந்த அறிவிப்பானது, இப்போது செயல்வடிவமும் பெற்றது. அதன்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலக 42 சேவைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
அதன்படி, பழங்குடியினர் உரிமம், நகல் ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் உரிமத்தில் பெயர் மாற்றம், பன்னாட்டு டிரைவிங் லைசென்ஸ், வாகனத்துக்கான தற்காலிக பதிவெண், பர்மிட்டில் பெயர் மாற்றம், பர்மிட் ஒப்படைத்தல் இந்நிலையில், போக்குவரத்து துறையுடன், தபால்துறையும் இணைந்து பணியாற்ற போவதாக இன்னொரு குட்நியூஸ் வந்துள்ளது..
ஆன்லைன் சேவைகள்: ஆம்.. போக்கு வரத்து துறை, தபால் துறையுடன் இணைந்து பணியாற்ற உள்ளது.. தமிழகம் முழுதும் உள்ள, 91 ஆர்டிஓ அலுவலகங்கள், 54 வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்களை, கணினி மயமாக்கும் முயற்சி எடுக்கப்படுகிறது. எனவே, ஆர்டிஓ அலுவலகங்களில், 48 சேவைகளில் முதற்கட்டமாக, ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட, 6 சேவைகள் ஏற்கனவே ஆன்லைனில் கொண்டு வரப்பட்ட நிலையில், முழு வீச்சில் அது செயல்படவில்லை.
எனவே, அதை சரி செய்ய, போக்குவரத்து ஆணையரகம் திட்டமிட்டுள்ளது. இதற்காகவே, தபால்துறையுடன் இணைவதாக தெரிகிறது. இது குறித்து, போக்குவரத்து ஆணையக அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, ஆர்டிஓ அலுவலகங்களில் இப்போது, 31 வகையான சேவைகள் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன.
மக்கள் இந்த சேவைகளை பெற வேண்டுமானால், ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விபரங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்... அதில் ஏதாவது விபரங்கள் மாறுபட்டிருந்தால், சேவையை பெற இயலாது.
இணையதள வசதி: எனவே, போக்குவரத்து சார்ந்த சேவைகளை மாநில போக்குவரத்து ஆணையத்தின்
https://tnsta.gov.in
இணைய தளத்தில் பெறலாம். ஆவணங்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில், தபால்துறையுடன் இணைந்து செயல்பட உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். 25 வகையான ஆவணங்களை வீடுகளில் கொடுக்க தமிழக போக்குவரத்து துறை , தபால் துறையுடன் இணைந்து பணிபுரிய இருப்பது, பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெரும் திட்டம் என்பதில் ஐயம் இல்லை.
What's Your Reaction?