கனடா விசா சேவையை இந்திய தூதரகம் இன்று முதல் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Oct 26, 2023 - 14:54
Oct 26, 2023 - 15:05
கனடா விசா சேவையை இந்திய தூதரகம் இன்று முதல் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில், இந்திய ஏஜென்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தார். 

 இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து, கனடாவில் பணியாற்றும் சில இந்திய தூதரக அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர்.  

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கனடா நாட்டினருக்கான விசா சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. 

 கனடா மேற்கொண்ட சில பாதுகாப்பு நடவடிக்கையை தொடர்ந்து, விசா சேவையை இந்திய தூதரகம் இன்று முதல் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow