ஒப்பந்தம் தருவதாக கூறி பணம் பெற்றவர்கள் மீது புகார் அளிக்கலாம் – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக கூறி பணம் வசூலித்து ஏமாற்றியவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி புகார் அளிக்கலாம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில், ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து சிலர் பணம் பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்கள் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறை (DVAC)-யிடம் புகார் அளிக்கலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், பெறப்படும் ஒவ்வொரு புகாரும் முறையாக விசாரிக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உறுதியளித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0