தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Nov 1, 2023 - 09:54
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 16 இடங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 50 இடங்களும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 இடங்களும், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 17 இடங்களும் காலியாக உள்ளன.

இந்த இடங்களை கலந்தாய்வு நடத்தி நிரப்பிடக்கோரி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியிருந்தார்.

அதன் அடிப்படையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 7-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்படும் என்றும், மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நவம்பர் 7 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள்

tnmedicalselection.org

என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுமாறும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow