வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது

Jul 2, 2026 - 17:43
 0  5
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது

வடக்கு ஒடிஷா கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால், தமிழ்நாட்டில் கனமழைக்கு அதிக வாய்ப்பு இல்லை என்றும், ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு உருவாகியுள்ள முதல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இதுவாகும். மேலும், அடுத்த 2 முதல் 3 நாட்களுக்குள் இது வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0