பெருவில் அவசரநிலை பிரகடனம்
எல் நினோ பருவநிலை மாற்றத்தால் கனமழை மற்றும் இயற்கைப் பேரிடர் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், பெரு நாட்டின் சுமார் 40% மாவட்டங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள மொத்தம் 796 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் இந்த உத்தரவு 60 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த அவசரநிலை அறிவிப்பின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், தேவையான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் முடியும் என அரசு தெரிவித்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0