ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அறநிலையத்துறை இணை ஆணையர் கைது

Jul 3, 2026 - 10:42
 0  26
ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அறநிலையத்துறை இணை ஆணையர் கைது

தஞ்சாவூரில் ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமியை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அம்மாபேட்டை அருகே தீபாம்பாள்புரத்தில் உள்ள வள்ளியம்மைநாதர் கோயில் புதுப்பிப்புப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அன்பழகன் தலைமையிலான அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0