காஸாவில் போர் நிறுத்தம்: ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்

Oct 28, 2023 - 12:38
காஸாவில் போர் நிறுத்தம்: ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்

காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

193 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பில், 120 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. கனடா, இங்கிலாந்து, இத்தாலி, இந்தியா, ஜெர்மனி மற்றும் உக்ரைன் உள்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்த தீர்மானத்தில், உடனடியாக மனிதாபிமானஅடிப்படையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் எனவும்,காஸா பகுதிக்குள் அத்தியாவசிய பொருள்கள் சேவைகளை தொடர்ந்து தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow