தவெக இணைப்பு விழாவில் பரபரப்பு பேச்சுகள்
தவெகவில் நடைபெற்ற இணைப்பு விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், "தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலேயே ஒரு புதிய அரசியல் புரட்சி உருவாகியுள்ளது. எம்.ஜி.ஆர். போல இனி தமிழகத்தில் விஜய் தலைமையிலான ஆட்சிதான் தொடரும்" என்று தெரிவித்தார்.
அதே நிகழ்வில் தவெகவில் இணைந்த சி. விஜயபாஸ்கர், "இப்போது நீங்கள் பார்ப்பது வெறும் டிரெய்லர்தான். தலைமையின் ஆதரவுடன் டெல்டா மாவட்டங்களில் 'மெயின் பிக்சர்' காட்டப்படும். அங்கு மிகப்பெரிய இணைப்பு விழாவை நடத்தத் தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.
இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், "அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மக்களுக்கு துரோகம் அல்ல. திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக முயற்சித்ததே மக்களுக்கு செய்யப்பட்ட துரோகம். தற்போது தேர்தல் நடைபெற்றால், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 60 சதவீத வாக்குகள் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0