தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள்
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள்
தமிழக அரசியல் களத்தில் முக்கிய திருப்பமாக, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் மாநில நிர்வாகிகள் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ். வளர்மதி மற்றும் எம்.எஸ்.எம். அனந்தன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துள்ளனர்.
மேலும், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பி.கே. வைரமுத்து, இளம்பை தமிழ்ச்செல்வன், மான்ராஜ், ஆ. ராம்குமார், ராஜவர்மன், சதன் பிரபாகர் மற்றும் திருஞானசம்பந்தம் உள்ளிட்ட பலரும் கட்சியில் இணைந்துள்ளனர்.
புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், திருப்பூர், மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் அதிமுகவின் மருத்துவ அணி, இளைஞரணி, மகளிரணி, வழக்கறிஞர் பிரிவு, வர்த்தக அணி, இலக்கிய அணி, அம்மா பேரவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாநில நிர்வாகிகளும் தவெகவில் இணைந்துள்ளனர்.
குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 11 ஒன்றியக் கழகச் செயலாளர்கள் ஒரே நேரத்தில் தவெகவில் இணைந்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் முதல் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் வரை பெரும் எண்ணிக்கையிலான அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைந்துள்ள இந்த நிகழ்வு, தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்கள்:
1. சி.விஜயபாஸ்கர்
2. எம்.ஆர் விஜயபாஸ்கர்
3. எஸ். வளர்மதி – முன்னாள் அமைச்சர், திருச்சி
4. எம்.எஸ்.எம். அனந்தன் – முன்னாள் அமைச்சர், திருப்பூர்
மாவட்டச் செயலாளர்களாக இருந்தவர்கள்:
1. பி.கே. வைரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ – புதுக்கோட்டை
2. இளம்பை. தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ – பெரம்பலூர்
3. ஓரத்தநாடு மா. சேகர் – தஞ்சாவூர்
4. சீனிவாசன் – முன்னாள் துணை மேயர், திருச்சி
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்
1. மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ – ஸ்ரீவில்லிபுத்தூர்
2. ஆ. ராம்குமார், முன்னாள் எம்.எல்.ஏ – கும்பகோணம்
3. ராஜவர்மன், முன்னாள் எம்.எல்.ஏ – திருச்சுழி
4. சதன் பிரபாகர், முன்னாள் எம்.எல்.ஏ – பரமக்குடி
5. திருஞானசம்பந்தம், முன்னாள் எம்.எல்.ஏ – பேராவூரணி
எம்.பி./எம்.எல்.ஏ வேட்பாளர்கள்:
1. ப. கருப்பையா – திருச்சி நாடாளுமன்றத் தொகுதி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்
2. தர்ம தங்கவேல் – ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி, மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர்
3. பிற நிர்வாகிகள்
4. ராஜசேகர் – திருச்சி கிழக்கு தொகுதி
5. வேலுமணி – தென் நகர் வடக்கு பகுதி செயலாளர் (சென்னை)
6. ஆர். ராணி – விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி, மாநில மகளிரணி துணைச் செயலாளர்
7. மாவட்டக் கழக நிர்வாகிகள்
8. ஏ. இராமசாமி – மாவட்டக் கழக அவைத்தலைவர், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர்
9. எஸ். கருப்பையன் – மாவட்டக் கழக துணைச் செயலாளர், முன்னாள் எல்.டி. பேங்க் தலைவர்
10. பி. விஜயபூபதி – மாவட்டக் கழக துணைச் செயலாளர்
11. ஆ. மீனாள் முருகேசன் – மாவட்டக் கழக இணைச் செயலாளர்
12. ஆ. அரசு மாரிமுத்து – மாவட்டக் கழக துணைச் செயலாளர்
மாநில நிர்வாகிகள் :
1. டாக்டர் இராமசாமி – மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர்
2. எம்.டி.ஆர். தமிழரசன் – மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளர்
3. பாறை சிவா – மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர்
4. பி. காமராஜ் – மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்
5. வழக்கறிஞர் ராஜராஜன் – மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்
6. சு. சந்திரன் – மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர்
7. சு. சிவக்குமார் – மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்
8. அ. சுப்பையா (எ) இளவரசன் – மாநில விவசாயப் பிரிவு துணைச் செயலாளர்
9. மதுரை கார்த்திக் – மாநில இளைஞரணி துணைச் செயலாளர்
10. ஆவின் செல்வம் – மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர்
11. வழக்கறிஞர் கதிர் – மாநில வர்த்தக அணி துணைத் தலைவர்
12. தென்சென்னை ராமலிங்கம் – மாநில இளைஞரணி துணைச் செயலாளர்
13. டி. டில்லி பாபு – மாநில கலைப்பிரிவு இணைச் செயலாளர்
14. ஏ.வி.பி. லண்டன் அசோக் – அயலக அணி பொறுப்பாளர்
15. கவிதா சசிக்குமார் – முன்னாள் சேர்மன், இராமநாதபுரம்
16. எஸ்.எம். சுந்தரராஜன் – மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்
17. எஸ்.எஸ்.ஆர். சத்யா – மாநில இளைஞரணி துணைச் செயலாளர்
18. சு. ராஜேஷ் – மாவட்ட மாணவரணி துணைத் தலைவர், காஞ்சிபுரம் மாவட்டம்
19. நடிகர் சுஜன் சந்துரு
20. மேலூர் அருண்
21. ராமமூர்த்தி – மாநகராட்சி கவுன்சிலர், திருச்சி (வட்டச் செயலாளர், திமுக)
22. கே. சுந்தரம் – எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் (திருச்சி மாநகர்)
23. வழக்கறிஞர் செந்தில் – மாநில வழக்கறிஞர் பிரிவு
ஒன்றியக் கழகச் செயலாளர்கள் : புதுக்கோட்டை
1. என். முத்தமிழ்ச்செல்வன் – அன்னவாசல் கிழக்கு
2. சு. சுப்பையா – அன்னவாசல் மேற்கு
3. அ.வே. ராஜேந்திரன் – விராலிமலை வடக்கு
4. ஆ. திருமூர்த்தி – விராலிமலை கிழக்கு
5. எஸ். பழனியாண்டி – விராலிமலை மேற்கு
6. எஸ். நாகராஜன் – விராலிமலை தெற்கு
7. ஆ. இராமநாதன் – குன்றாண்டார்கோவில் மேற்கு
8. கே. பாலு (எ) பால்ராஜ் – குன்றாண்டார்கோவில் கிழக்கு
9. பி. பாண்டியன் – கந்தர்வக்கோட்டை மேற்கு
10. பி.எம்.எஸ். முத்துக்குமார் – அன்னவாசல் வடக்கு
11. கே. கணேசன் – கரம்பக்குடி வடக்கு
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0