ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரம் நடக்கிறது; விசாரணை நடத்த வேண்டும் – சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

Jul 2, 2026 - 13:00
 0  14
ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரம் நடக்கிறது; விசாரணை நடத்த வேண்டும் – சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

திமுகவால் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நிலையை ஏற்க முடியாமல், தற்போதைய ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், அத்தகைய கூட்டணி ஆட்சியை தாங்கள் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுவதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும் சண்முகம் கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0