அதிமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்
அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த நிர்வாகியுமான எம்.எஸ்.எம். ஆனந்தன், கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சியின் செயல்பாடுகள் மற்றும் உள்கட்சி சூழல் குறித்து ஏற்பட்ட அதிருப்தியே தனது முடிவுக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையின் தன்னிச்சையான அணுகுமுறை, சுயநலப் போக்கு மற்றும் அடிமட்டத் தொண்டர்களின் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததே விலகலுக்குக் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தேர்தல் தோல்விக்குப் பிறகு மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமையிடமிருந்து எந்தவித ஆறுதலோ, எதிர்கால செயல்திட்டம் குறித்த நம்பிக்கையோ வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கும் கட்சித் தலைமையுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் பின்னணியில், இந்த விலகல் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0