ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கான தகுதி விதிமுறைகளை வெளியிட்டது ஐசிசி

Jul 1, 2026 - 10:51
 0  24
ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கான தகுதி விதிமுறைகளை வெளியிட்டது ஐசிசி

2028-ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் கிரிக்கெட் போட்டிக்கான தகுதி விதிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.

ஆண்கள் பிரிவில், 2026 டிசம்பர் 31-ஆம் தேதியன்று ஐசிசி தரவரிசையில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாக ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும். போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் அமெரிக்கா (USA) ஏற்கனவே தகுதி பெற்றுள்ளதால், மீதமுள்ள ஒரு இடத்திற்காக தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்படும்.

பெண்கள் பிரிவில், தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் அமெரிக்கா (USA) ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0